search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சென்போன் திருட்டு"

    பூதப்பாண்டி அருகே வீட்டின் மேஜையை உடைத்து 3 செல்போன் திருடிய வாலிபரை ஒருவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    நாகர்கோவில்:

    பூதப்பாண்டியை அடுத்த இறச்சக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் மனோகரன் (வயது53). தொழிலாளி. இவர் வீட்டில் இருந்து வெளியேச் சென்றிருந்தார். பின்னர் சிறிது நேரம் கழித்து வீடு திரும்பினார். அப்போது வீட்டில் கதவு திறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

    வீட்டுக்குள் இருந்த மேஜையை உடைத்து அதில் இருந்து 3 செல்போன்கள் திருடப்பட்டிருந்தது. இது குறித்து பூதப்பாண்டி போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ் பெக்டர் சுந்தரமூர்த்தி, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அப்துல்காதர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர்.

    கொள்ளையன் குறித்து அந்த பகுதியில் விசாரணை மேற்கொண்டனர். தீவிர சோதனையிலும் ஈடுபட்டனர். இந்த நிலையில் மனோகரன் வீட்டில் செல்போன் திருடியதாக அதே பகுதியைச் சேர்ந்த 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    நாகர்கோவிலில் நேற்றிரவு வீட்டில் நுழைந்த மர்ம நபர்கள் அங்கிருந்த செல்போன் மற்றும் ரூ.10 ஆயிரத்தை திருடி சென்றனர்.
    நாகர்கோவில்:

    நாகர்கோவில் வட்டக்கரையைச் சேர்ந்தவர் அலோசியஸ் பானு, (வயது 54), இவர் கேட்டரிங் வேலை செய்து வருகிறார். இவரது மகள் ரேசல் (24). இவர்கள் இருவரும் நேற்றிரவு வழக்கம்போல் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர். அதிகாலை 2 மணியளவில் மர்மநபர் ஒருவர் ரேசல் கழுத்தில் கிடந்த செயினை பறிக்க முயன்றார். திடுக்கிட்டு எழுந்த ரேசல் திருடன்... திருடன்... என கூச்சலிட்டார்.

    இதையடுத்து அலோசியஸ் பானு கண் விழித்தார். அவர், திருடனை பிடிக்க முயன்றார். அதற்குள் மர்ம நபர் அங்கிருந்து தப்பியோடி விட்டார். ஆனால் வீட்டின் மேஜையில் இருந்த ரூ.10 ஆயிரம் ரொக்கப்பணம் மற்றும் விலை உயர்ந்த செல்போன் ஒன்றையும் மர்மநபர் திருடிச்சென்றிருந்தார்.

    வீட்டின் ஜன்னல் வழியாக கையை நுழைத்து கதவை திறந்து கொள்ளையன் வீட்டிற்குள் புகுந்தது தெரியவந்தது. இது குறித்து நேசமணி நகர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள்.

    கொள்ளையன் குறித்து ரேசலிடம் போலீசார் அடையாளங்களை கேட்டறிந்தனர். இதையடுத்து அந்த பகுதியில் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. ஆனால் கொள்ளையர்கள் யாரும் சிக்கவில்லை. கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு சென்று வீட்டின் கதவில் பதிவாகி இருந்த ரேகைகளை பதிவு செய்தனர். அந்த பகுதியில் கண்காணிப்பு கேமிராவின் காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.
    ×